Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 347)

Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1

மாரீசம் த்ராவயித்வா மகசிரஸி சரைரந்ய ரக்ஷாம்ஸி நிக்நந் கல்யாம் குர்வந்நஹல்யாம் பதி பதரஜஸா ப்ராப்ய வைதேஹ கேஹம் பிந்தாநச்சாந்த்ரசூடம் தநுரவநிஸுதாம் இந்தராமேவ லப்த்வா ராஜ்யம் ப்ராதிஷ்டதாஸ்த்வம் த்ரிபிரபி ச ஸமம் ப்ராத்ருவீரைஸ்ஸதாரை: மாரீசம் த்ராவயித்வா மக சிரஸி சரை: அந்ய ரக்ஷாம்ஸி நிக்நந் கல்யாம் குர்வந் அஹல்யாம் பதி பதரஜஸா ப்ராப்ய வைதேஹ கேஹம் பிந்தாந: சாந்த்ரசூடம் தநு: அவநி ஸுதாம் இந்தராம் ஏவ லப்த்வா ராஜ்யம் ப்ராதிஷ்டதா: த்வம் த்ரிபி: அபி ச ஸமம் ப்ராத்ருவீரை: ஸதாரை: मारीचं द्रावयित्वा मखशिरसि शरैरन्यरक्षांसि निघ्नन् कल्यां कुर्वन्नहल्यां पथि पदरजसा प्राप्य वैदेहगेहम् । भिन्दानश्चान्द्रचूडं धनुरवनिसुतामिन्दिरामेव लब्ध्वा राज्यं प्रातिष्ठथास्त्वं त्रिभिरपि च समं भ्रातृवीरैस्सदारैः

குருவாயூரப்பா! அங்கு நடந்த யாகத்தின் தொடக்கத்தில் உனது அம்புகளால் மாரீசன் என்ற அரக்கனை விரட்டினாய். அவனுடன் இருந்த அசுரர்களைக் கொன்றாய். நீ நடந்து சென்ற வழியில் அஹல்யை உனது பாத துளிகளால் புனிதம் ஆக்கினாய். அதன் பின்னர் விதேஹ ராஜனான ஜனகன் அரண்மனையை அடைந்தாய். அங்கு இருந்த சிவனுடைய வில்லை முறித்து பூமாதேவியின் மகளான ஸ்ரீமஹாலக்ஷ்மியாகிய சீதையை மனைவியாக அடைந்தாய். பின்னர் நீயும் உனது சகோதரர்களும், மனைவிகளுடன் கோசல நாட்டிற்குப் புறப்பட்டீர்கள் அல்லவா?