Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 346)

Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1

கோதண்டீ கௌசிகஸ்ய க்ரதுவரமவிதும் லக்ஷ்மணேநாநுநுயாதோ யாதோSபூஸ்தாத வாசா முநி கதிதமநு த்வந்த்வ சாந்தாத்வ கேத: ந்ரூணாம் த்ராணாய பாணைர்முநிவசன பலாத் தாடகாம் பாடயித்வா லப்த்வாஸ்மாதஸ்த்ர ஜாலம் முனிவநமகமோ தேவ ஸித்தாச்ரமாக்யம் கோதண்டீ கௌசிகஸ்ய க்ரதுவரம் அவிதும் லக்ஷ்மணேந அநுநுயாத: யாத: அபூ: தாத வாசா முநி கதித மநு த்வந்த்வ சாந்த அத்வ கேத: ந்ரூணாம் த்ராணாய பாணை: முநி வசன பலாத் தாடகாம் பாடயித்வா லப்த்வா அஸ்மாத் அஸ்த்ர ஜாலம் முனி வநம் அகம: தேவ ஸித்தாச்ரம ஆக்யம் कोदण्डी कौशिकस्य क्रतुवरमवितुं लक्ष्मणेनानुयातो यातोऽभूस्तातवाचा मुनिकथितमनुद्वन्द्वशान्ताध्वखेदः । नॄणां त्राणाय बाणैर्मुनिवचनबलात्ताटकां पाटयित्वा लब्ध्वास्मादस्त्रजालं मुनिवनमगमो देव सिद्धाश्रमाख्यम्

குருவாயூரப்பா! உனது தந்தையான தசரதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கோதண்டம் என்ற வில் ஏந்தியபடி, லக்ஷ்மணன் உன்னைத் தொடர்ந்து வர, விச்வாமித்ர முனிவரின் சிறப்பான யாகத்தை (அசுரர்களிடம் இருந்து) காப்பாற்றுவதற்காகச் சென்றாய் அல்லவா? வழியில் நடந்த களைப்பானது, விச்வாமித்திரர் உனக்கு உபதேசித்த பலா மற்றும் அதிபலா ஆகிய மந்த்ரங்கள் மூலம் தீர்ந்தது. மனிதர்களைக் காப்பதற்காக, விச்வாமித்திரரின் கட்டளைக்கு உட்பட்டு தாடகை என்ற அரக்கியை உனது அம்புகளால் வீழ்த்தினாய். இதனால் மகிழ்ந்த அந்த முனிவர் மூலமாக பலவிதமான அஸ்திரங்களை பெற்றாய். பின்னர் முனிவர்களின் இருப்பிடமான ஸித்தாச்ரமம் என்ற இடத்திற்குச் சென்றாய்.