Sriman Narayaneeyam - Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1 (ச்லோகம் 345)
Dasaka 34 - ஸ்ரீராமன் அவதாரம் - 1
கீர்வாணை: அர்த்யமாநோ தசமுகநிதநம் கோஸலேஷு ருஷ்யச்ருங்கே புத்ரீயாமிஷ்டிமிஷ்ட்வா ததுஷி தசரதக்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம் தத்புக்த்யா தத்புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு ஸமம் ஜாதகர்பாஸு ஜாதோ ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயமத பரதேநாபி சத்ருக்ந நாம்னா கீர்வாணை: அர்த்யமாநோ தசமுக நிதநம் கோஸலேஷு ருஷ்யச்ருங்கே புத்ரீயாம் இஷ்டிம் இஷ்ட்வா ததுஷி தசரத க்ஷ்மாப்ருதே பாயஸ அக்ர்யம் தத் புக்த்யா தத் புரந்த்ரஷு அவபி திஸ்ருஷு ஸமம் ஜாதகர்பாஸு ஜாத: ராம: த்வம் லக்ஷ்மணேன ஸ்வயம் அத பரதேந அபி சத்ருக்ந நாம்னா गीर्वाणैरर्थ्यमानो दशमुखनिधनं कोसलेऽष्वृश्यषृङ्गे पुत्रीयामिष्टिमिष्ट्वा ददुषि दशरथक्ष्माभृते पायसाग्र्यम् । तद्भुक्त्या तत्पुरन्ध्रीष्वपि तिसृषु समं जातगर्भासु जातो रामस्त्वं लक्ष्मणेन स्वयमथ भरतेनापि शत्रुघ्ननाम्ना
குருவாயூரப்பா! இராவணனை அழிக்கும்படியாக உன்னைத் தேவர்கள் வேண்டி நின்றனர். கோஸல தேசத்தில் ருஷ்யச்ருங்கர் என்ற முனிவர் புத்ர காமேஷ்டி யாகத்தை செய்தார் (தசரதன் வேண்டுகோளுக்கு இணங்க). அங்கு உதித்த உன்னதமான பாயஸத்தை தசரதனிடம் கொடுத்தார். அதனை உட்கொண்ட தசரதனின் மனைவிகள் மூன்று பேரும் கர்ப்பம் உற்றனர். அங்கு லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோருடன் நீ இராமனாகப் பிறந்தாய் அல்லவா?