Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 344)
Dasaka 33 - அம்பரீஷ சரிதம்
ராஜா ப்ரதீக்ஷ்ய முநிமேகஸமாமநாச்வாந் ஸம்போஜ்ய ஸாது தம்ருஷிம் விஸ்ருஜந் ப்ரஸந்நம் புக்த்வா ஸ்வயம் த்வயி ததோSபி த்ருடம் ரதோSபூத் ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவநேச பாயா: ராஜா ப்ரதீக்ஷ்ய முநிம் ஏகஸமாம் அநாச்வாந் ஸம்போஜ்ய ஸாது தம் ருஷிம் விஸ்ருஜந் ப்ரஸந்நம் புக்த்வா ஸ்வயம் த்வயி தத: அபி த்ருடம் ரத: அபூத் ஸாயுஜ்யம் ஆப ச ஸ மாம் பவநேச பாயா: राजा प्रतीक्ष्य मुनिमेकसमामनाश्वान् सम्भोज्य साधु तमृषिं विसृजन् प्रसन्नम् । भुक्त्वा स्वयं त्वयि ततोऽपि दृढं रतोऽभूत् सायुज्यमाप च स मां पवनेश पायाः
குருவாயூரப்பா! அம்பரீஷன் துர்வாஸ முனிவரை எதிர்பார்த்து ஒரு வருட காலம், எந்தவிதமான ஆகாரமும் உண்ணாமல் காத்திருந்தான். அவர் வந்ததும் அவர் மகிழ்வுறும்படி அவருக்கு உணவு அளித்தான். அவர் சென்ற பிறகு அவன் பாரணை (உணவு உட்கொள்ளல்) செய்தான். உன்னிடம் முன்பு இருந்ததை விடப் பல மடங்கு அதிகமான பக்தி கொண்டான். இறுதியாக உனது இருப்பிடத்தை அடைந்தான் அல்லவா? இத்தனை மகிமை உள்ளவனே! என்னைக் காக்க வேண்டும்.***