Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 343)

Dasaka 33 - அம்பரீஷ சரிதம்

தாவத்ஸமேத்ய முநினா ஸ க்ருஹீத பாதோ ராஜாSபஸ்ருத்ய பவதஸ்த்ரமஸாவநௌஷீத் சக்ரே கதே முநிரதாதகிலாசிஷோSஸ்மை த்வத் பக்திமாகஸி க்ருதேSபி க்ருபாம் ச சம்ஸன் தாவத் ஸமேத்ய முநினா ஸ க்ருஹீத பாத: ராஜா அபஸ்ருத்ய பவத் அஸ்த்ரம் அஸௌ அநௌஷீத் சக்ரே கதே முநி: அதாத் அகில ஆசிஷ: அஸ்மை த்வத் பக்திம் ஆகஸி க்ருதே அபி க்ருபாம் ச சம்ஸன் तावत्समेत्य मुनिना स गृहीतपादो राजाऽपसृत्य भवदस्त्रमसावनौषीत् । चक्रे गते मुनिरदादखिलाशिषोऽस्मै त्वद्भक्तिमागसि कृतेऽपि कृपां च शंसन्

குருவாயூரப்பா! உடனே துர்வாஸர் விரைவாக ஓடி வந்து அம்பரீஷனின் கால்களைப் பிடித்தார். இத்தகைய பெருமையுடைய அம்பரீஷன் (அவனது பக்தியால் உண்டான பெருமை) உனது சக்ராயுதத்தைத் துதித்தான். அந்த ஆயுதமும் சமாதானம் ஏற்பட்டு மறைந்தது. துர்வாஸர் அம்பரீஷன் உன்னிடம் கொண்டிருந்த பக்தியைப் புகழ்ந்தார். அவனுக்குத் தீமை செய்த போதிலும் அவன் மன்னித்துக் கருணை காண்பித்த செயலைப் புகழ்ந்தார். அவனுக்கு அனைத்து ஆசிகளையும் வழங்கினார்.