Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 342)
Dasaka 33 - அம்பரீஷ சரிதம்
பூயோ பவந்நிலையமேத்ய முநிம் நமந்தம் ப்ராசே பவாநஹம்ருஷே நநு பக்ததாஸ: ஜ்ஞாநம் தபச்ச விநயாந்விதமேவ மாந்யம் யாஹ்யம்பரீஷ பதமேவ பஜேதி பூமந் பூய: பவத் நிலையம் ஏத்ய முநிம் நமந்தம் ப்ராசே பவாந் அஹம் ருஷே நநு பக்த தாஸ: ஜ்ஞாநம் தப: ச விநய அந்விதம் ஏவ மாந்யம் யாஹி அம்பரீஷ பதம் ஏவ பஜ இதி பூமந் भूयो भवन्निलयमेत्य मुनिं नमन्तं प्रोचे भवानहमृषे ननु भक्तदासः । ज्ञानं तपश्च विनयान्वितमेव मान्यं याह्यम्बरीषपदमेव भजेति भूमन्
எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! துர்வாஸர் உனது இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். உன்னை வணங்கி நின்ற துர்வாஸரிடம் நீ, “முனிவரே! நான் பக்தர்களின் அடிமை அல்லவோ? அறிவும் ஆராதனையும் அகங்காரமும் சிறிதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே மதிக்கத்தக்கது. நீ இங்கு இருந்து போய் அம்பரீஷனிடமே சரணம் அடைவாய்”, என்றாய்.