Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 341)
Dasaka 33 - அம்பரீஷ சரிதம்
தாவந்நசேஷ புவநேஷு பியா ஸ பச்யந் விச்வத்ர சக்ரமபி தே கதவாந் விரிஞ்சம் க: காலசக்ரமதிலங்கயதீத்யபாஸ்த: சர்வம் யயௌ ஸ ச பவந்தமவந்ததைவ தாவந் அசேஷ புவநேஷு பியா ஸ பச்யந் விச்வத்ர சக்ரம் அபி தே கதவாந் விரிஞ்சம் க: காலசக்ரம் அதிலங்கயதி இதி அபாஸ்த: சர்வம் யயௌ ஸ ச பவந்தம் அவந்தத ஏவ धावन्नशेषभुवनेषु भिया स पश्यन् विश्वत्र चक्रमपि ते गतवान् विरिञ्चम् । कः कालचक्रमतिलङ्घयतीत्यपास्तः शर्वं ययौ स च भवन्तमवन्दतैव
குருவாயூரப்பா! உனது சக்கரத்திற்குப் பயந்து அனைத்து உலகங்களுக்கும் துர்வாஸர் ஓடினார். தான் சென்ற இடங்களில் எல்லாம் உனது ஆயுதத்தைக் கண்டார். நான்முகனிடம் சென்றார். நான்முகன், “காலமாகிய சக்கரத்தை யாரால் அடக்க இயலும்?”, என்று கூறிவிட்டான். சிவனை சென்று அடைந்தார். அவரும் கூட உன்னை வணங்கத் தொடங்கினார்.