Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 339)
Dasaka 33 - அம்பரீஷ சரிதம்
ராஜ்ஞாSத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதாத் வாரைவ பாரணமகாரி பவத் பரேண ப்ராப்தோ முநிஸ்தத் திவ்யத்ருசா விஜாநந் க்ஷிப்யந் க்ருதோத்ருத ஜடோ விததாந க்ருத்யாம் ராஜ்ஞா அத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதாத் வாரா ஏவ பாரணம் அகாரி பவத் பரேண ப்ராப்த: முநி: தத் திவ்ய த்ருசா விஜாநந் க்ஷிப்யந் க்ருதா உத்ருத ஜட: விததாந க்ருத்யாம் राज्ञाऽथ पारणमुहूर्तसमाप्तिखेदा - द्वारैव पारणमकारि भवत्परेण । प्राप्तो मुनिस्तदथ दिव्यदृशा विजानन् क्षिप्यन् कृधोद्धृतजटो विततान कृत्याम्
குருவாயூரப்பா! பாரணை செய்வதற்கான நேரம் தவறிவிடும் என்பதால் வருத்தத்துடன் அம்பரீஷன் தண்ணீரை மட்டுமே குடித்து பாரணையை பூர்த்தியாக்கினான். அதன் பின்னர் அங்கு வந்த துர்வாஸர் தனது ஞான த்ருஷ்டியால் நடந்ததை உணர்ந்தார். அரசனை கடும் சொற்களால் கோபித்தார். தனது சடாமுடியை அவிழ்த்து விட்டு, ஒரு பூதத்தை உருவாக்கினார்.