Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 338)

Dasaka 33 - அம்பரீஷ சரிதம்

தத்ராத பாரணதிநே பவதர்சநாந்தே துர்வாஸஸாSஸ்ய முநினா பவநம் ப்ரபேதே போக்தும் வ்ருதச்ச ஸ ந்ருபணே பரார்த்திசீலோ மந்தம் ஜகாம யமுநாம் நியமான் விதாஸ்யன் தத்ர அத பாரண திநே பவத் அர்ச்ச அந்தே துர்வாஸஸா அஸ்ய முநினா பவநம் ப்ரபேதே போக்தும் வ்ருதச்ச ஸ ந்ருபணே பரார்த்திசீல: மந்தம் ஜகாம யமுநாம் நியமான் விதாஸ்யன் तत्राथ पारणदिने भवदर्चनान्ते दुर्वाससाऽस्य मुनिना भवनं प्रपेदे । भोक्तुं वृतश्च स नृपेण परार्तिशीलो मन्दं जगाम यमुनां नियमान्विधास्यन्

குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த இடத்தில் பாரணை (உணவு உட்கொள்ளும் நேரம்) நாள் வந்தது. அன்று உன்னைத் துதித்து விரதத்தை முடித்தான். அந்தப் பூஜையின் முடிவில் துர்வாஸ முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். பிறருக்குத் துன்பம் கொடுத்து அதில் சுகம் காண்பதைத் தனது இயல்பாக உடையவர் துர்வாஸர் ஆவார். அரசன் அவரை பாரணைக்கு அழைத்தான். அப்போது அவர் தனது அன்றாடக் கடமைகளை முடிப்பதற்காக மெதுவாக நடந்து யமுனைக்குச் சென்றார்.