Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 337)

Dasaka 33 - அம்பரீஷ சரிதம்

ஸ த்வாதசீ வ்ரதமதோ பவதர்ச்சநார்த்தம் வர்ஷம் ததௌ மதுவநே யமுநோபகுண்டே பத்ந்யா ஸமம் ஸுமநஸா மஹதீம் விதந்வந் பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜந் பசுஷஷ்டிகோடிம் ஸ த்வாதசீ வ்ரதம் அத: பவத் அர்ச்சந அர்த்தம் வர்ஷம் ததௌ மதுவநே யமுநோ பகுண்டே பத்ந்யா ஸமம் ஸுமநஸா மஹதீம் விதந்வந் பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜந் பசு ஷஷ்டி கோடிம் स द्वादशीव्रतमथो भवदर्चनार्थं वर्षं दधौ मधुवने यमुनोपकण्ठे । पत्न्या समं सुमनसा महतीं वितन्वन् पूजां द्विजेषु विसृजन् पशुषष्टिकोटिम्

குருவாயூரப்பா! அந்த அம்பரீஷன் யமுனை நதியான கரையில் உள்ள மதுவனத்தில், நல்ல உள்ளம், கொண்ட தனது மனைவியுடன் இணைந்து மிகவும் பெரிய பூஜை செய்தான். அங்கு ப்ராமணர்களுக்கு அறுபது கோடி பசுக்களைத் தானமாக அளித்தான். தொடர்ந்து உன்னைப் பூஜிப்பதற்கு எண்ணி, ஒரு வருடம் த்வாதசி வ்ரதம் மேற்கொண்டனர்.