Sriman Narayaneeyam - Dasaka 33 - அம்பரீஷ சரிதம் (ச்லோகம் 336)
Dasaka 33 - அம்பரீஷ சரிதம்
த்வத் ப்ரீதயே ஸகலமேவ விதந்வதோSஸ்ய பக்த்யைவ தேவ நசிராதப்ருதா: ப்ராஸதம் யேநாஸ்ய யாசநம் ருதேபிSப்யரக்ஷணார்த்தம் சக்ரம் பவாந் ப்ரவிததார ஸஹஸ்ரதாரம் த்வத் ப்ரீதயே ஸகலம் ஏவ விதந்வத: அஸ்ய பக்த்யா ஏவ தேவ நசிராத் அப்ருதா: ப்ராஸதம் யேந அஸ்ய யாசநம் ருதே அபி ரக்ஷணார்த்தம் சக்ரம் பவாந் ப்ரவிததார ஸஹஸ்ரதாரம் त्वत्प्रीतये सकलमेव वितन्वतोऽस्य भक्त्यैव देव नचिरादभृथाः प्रसादम् । येनास्य याचनमृतेऽप्यभिरक्षणार्थं चक्रं भवान् प्रविततार सहस्रधारम्
குருவாயூரப்பா! அம்பரீஷ் தனது எந்தச் செயலையுமே உனது மகிழ்வுக்காகச் செய்து வந்தான். இத்தகைய பக்தியை மெச்சிய நீ சீக்கிரமாவே அவனுக்கு அருள் புரிந்தாய். அவன் உன்னிடம் எதுவும் கேட்காமல் இருந்தபோது நீயாகவே, உனது ஆயுதமான, ஆயிரக்கணக்கான கூர்மையான முனைகள் உடைய சக்கரத்தை, அவனுக்குத் துணையாக அளித்தாய்.