Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 333)

Dasaka 32 - மச்ச அவதாரம்

கல்பாவதௌ ஸப்த முநீன் புரோவத் ப்ரஸ்தாப்ய ஸத்யவ்ரத பூமிபம் தம் வைவஸ்வதாக்யம் மநுமததாந: க்ரோதாத் ஹயக்ரீவமபித்ருதோSபூ: கல்ப அவதௌ ஸப்த முநீன் புரோவத் ப்ரஸ்தாப்ய ஸத்யவ்ரத பூமிபம் தம் வைவஸ்வத ஆக்யம் மநும் ஆததாந: க்ரோதாத் ஹயக்ரீவம் அபித்ருத: அபூ: कल्पावधौ सप्त मुनीन्पुरोवत् प्रस्ताप्य सत्यव्रतभूमिपं तम् । वैवस्वताख्यं मनुमादधानः क्रोधाद्धयग्रीवमभिद्रुतोऽभूः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரளயம் முடிந்த பின்னர் ஸப்த ரிஷிகளை மீண்டும் அவர்களுக்கு உரிய ஸப்தரிஷி மண்டலத்தில் வைத்தாய். ஸத்ய வ்ரதனை அடுத்த கல்பத்தின் மனுவாகச் (வைவஸ்வதன்) செய்தாய் (இவனுடைய வழித் தோன்றல்களே இராமன் பிறந்த இக்ஷ்வாகு குலமாகும்). பின்னர் மிகுந்த கோபத்துடன் சென்று அசுரன் ஹயக்ரீவனைத் தாக்கினாய்.