Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 332)
Dasaka 32 - மச்ச அவதாரம்
ஆக்ருஷ்ட நௌக: முநிமண்டலாய ப்ரதர்சயந் விச்வ ஜகத்விபாகாந் ஸம்ஸ்தூயமாநோ ந்ருவரேண தேந ஜ்ஞாநம் பரம் ச உபதிசந்நசாரீ: ஆக்ருஷ்ட நௌக: முநி மண்டலாய ப்ரதர்சயந் விச்வ ஜகத் விபாகாந் ஸம்ஸ்தூயமாந: ந்ருவரேண தேந ஜ்ஞாநம் பரம் ச உபதிசந் அசாரீ: आकृष्टनौको मुनिमण्डलाय प्रदर्शयन् विश्वजगद्विभागान् । संस्तूयमानो नृवरेण तेन ज्ञानं परं चोपदिशन्नचारीः
குருவாயூரப்பா! நீ அந்தப் படகை இழுத்துச் சென்றாய். அப்படிச் செல்லும்போது உலகத்தின் பல பாகங்களையும் அந்த முனிவர்களுக்குக் காண்பித்தாய். இதனைக் கண்ட ஸத்யவ்ரதன் உன்னைத் துதித்தான். அவனுக்கு ஞானத்தை உபதேசித்துக் கொண்டே நீ சென்றாய்.