Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 330)

Dasaka 32 - மச்ச அவதாரம்

தராம் த்வதாதேசகரீமவாப்தாம் நௌரூபிணீமாருருஹுஸ்ததா தே தத் கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூய: த்வமம்புதேராவிரபூர்மஹீயாந் தராம் த்வத் ஆதேசகரீம் அவாப்தம் நௌ ரூபிணீம் ஆருருஹு ததா தே தத் கம்ப கம்ப்ரேஷு ச தேஷு பூய: த்வம் அம்புதே: ஆவிரபூ: மஹீயாந் धरां त्वदादेशकरीमवाप्तां नौरूपिणीमारुरुहुस्तदा ते । तत्कम्पकम्प्रेषु च तेषु भूयस्त्वमम्बुधेराविरभूर्महीयान्

குருவாயூரப்பபா! அந்த நேரத்தில் உனது கட்டளைக்கு இணங்க பூதேவி ஒரு படகு போன்ற உருவம் எடுத்து வந்தாள். அதில் அவர்கள் (ஸத்யவ்ரதன் முதலானோர்) ஏறிக் கொண்டனர். அந்தப் படகானது கடுமையான வெள்ளத்தில் ஆடியபோது அவர்கள் பயந்தனர். அப்போது மிகப்பெரிய மீனாக நீ மீண்டும் தோன்றினாய்.