Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 328)
Dasaka 32 - மச்ச அவதாரம்
யோகப்ரபாவாத் பவதாஜ்ஞயைவ நீதஸ்ததஸ்த்வம் முநினா பயோதிம் ப்ருஷ்டாSமுநா கல்பதித்ருக்ஷமேநம் ஸப்தாஹமாஸ்வேதி வதந்நயாஸீ: யோக ப்ரபாவாத் பவத் ஆஜ்ஞயா ஏவ நீத: தத: த்வம் முநினா பயோதிம் ப்ருஷ்ட: அமுநா கல்ப தித்ருக்ஷம் ஏநம் ஸப்த ஆஹம் ஆஸ்வ இதி வதம் அயாஸீ: योगप्रभावाद्भवदाज्ञयैव नीतस्ततस्त्वं मुनिना पयोधिम् । पृष्टोऽमुना कल्पदिदृक्षुमेनं सप्ताहमास्वेति वदन्नयासीः
குருவாயூரப்பா! உன்னுடைய உத்தரவுக்கு இணங்க அந்த அரசன் உன்னைக் கடலில் கொண்டு விட்டான். உனது அவதாரத்தைப் புரிந்து கொண்ட அந்த அரசன் ப்ரளயத்தைக் காண விரும்புவதாக உன்னிடம் கூறினான். அவனிடம் நீ பொறுமையாகக் காத்திருக்கும்படிக் கூறிவிட்டு, கடலில் மறைந்தாய்.