Sriman Narayaneeyam - Dasaka 32 - மச்ச அவதாரம் (ச்லோகம் 325)

Dasaka 32 - மச்ச அவதாரம்

புரா ஹயக்ரீவ மஹாஸுரேண ஷஷ்டாந்தராந் தோத்யத காண்டகல்பே நித்ரோந்முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு வேதேஷ்வதித்ஸ: கில மத்ஸ்ய ரூபம் புரா ஹயக்ரீவ மஹா அஸுரேண ஷஷ்ட அந்தராந்த உத்யத காண்ட கல்பே நித்ரா உந்முக ப்ரஹ்ம முகாத் ஹ்ருதேஷு வேதேஷுஅதித்ஸ: கில மத்ஸ்ய ரூபம் पुरा हयग्रीवमहासुरेण षष्ठान्तरान्तोद्यदकाण्डकल्पे । निद्रोन्मुखब्रह्ममुखाद्धृतेषु वेदेष्वधित्सः किल मत्स्यरूपम्

குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் ஆறாவது மன்வந்த்ரமான சாக்ஷுஷ மன்வந்த்ரத்தின் போது, அதன் முடிவில் ப்ரளயம் உண்டானது. அந்தப் ப்ரளயத்தின் போது நான்முகன் நித்திரையில் இருந்தான். அந்த நேரம் நான்முகனின் முகத்தில் இருந்து ஹயக்ரீவன் என்னும் ஓர் அசுரன் தோன்றினான். அவன் வேதங்களை அபகரித்து மறைந்தான். அப்போது நீ மீன் உருவம் எடுத்து அவற்றை மீட்க முடிவு செய்தாய் அல்லவா?விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயம் 24ன் சுருக்கமாக இந்த தசகம் உள்ளது.