Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 324)

Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்

தர்ப்போசித்யை விஹிதமகிலம் தைத்ய ஸித்தோSஸி புண்யை: லோகஸ்தேSஸ்து த்ரிதிவ விஜயீ வாஸவத்வம் ச பச்சாத் மத்ஸாயுஜ்யம் பஜ ச புநரித்யந்வ க்ருஹ்ணா பலிம் தம் விப்ரைஸ்ஸந்தாநிதமகவர: பாஹி வாதாலயேச தர்ப்ப உசித்யை விஹிதம் அகிலம் தைத்ய ஸித்த: அஸி புண்யை: லோக: தே அஸ்து த்ரிதிவ விஜயீ வாஸவ த்வம் ச பச்சாத் மத் ஸாயுஜ்யம் பஜ ச புந: இதி அந்வ க்ருஹ்ணா பலிம் தம் விப்ரை: ஸந்தாநித மகவர: பாஹி வாதாலயேச दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै - र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् । मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं विप्रैस्सन्तानितमखवरः पाहि वातालयेश

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ மஹாபலியை நோக்கி, “திதியின் குலத்தில் உதித்தவனே! உனது கர்வத்தை அடக்கவே நான் இப்படிச் செய்தேன். நீ செய்த புண்ணிய காரியங்களால் நீ நன்மை பெற்றவனாக உள்ளாய். சுவர்க்கத்திற்கும் மேலான லோகம் உனக்கு உண்டாகட்டும் ( அது ஸுதலம் எனப்படும் பாதாள கீழ்லோகம் ஆகும்). அதன் பின்னர் இந்திரப் பதவியும் நீ அடைவாய். இறுதியில் எனது மோட்ச ராஜ்ஜியமும் அடைவாய்”, என்றாய். இப்படியாக நீ என்னையும் காப்பாற்ற வேண்டும்.***