Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 323)

Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்

பாசைர்பத்தம் பதக பதினா தைத்யமுச்சைரவாதீ: தார்த்தீயீகம் திச மம பதம் கிம் ந விச்வேச்வரோSஸி பாதம் மூர்த்னி ப்ரணய பகவந்நித்யகம்பம் வதந்தம் ப்ரஹ்லாதஸ்தம் ஸ்வயமுபகதோ மாநயந்நஸ்தவீத் த்வாம் பாசை: பத்தம் பதகபதின தைத்யம் உச்சை: அவாதீ: தார்த்தீயீகம் திச மம பதம் கிம் த விச்வேச்வர: அஸி பாதம் மூர்த்னி ப்ரணய பகவந் இதி அகம்பம் வதந்தம் ப்ரஹ்லாத: தம் ஸ்வயம் உபகத: மாநயந் அஸ்தவீத் த்வாம் पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी - स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि । पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं प्रह्लादस्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम्

குருவாயூரப்பா! அப்போது கருடனால் வருணன் என்ற பாசக்கயிற்றால் மகாபலி கட்டப்பட்டான் (அவனுக்கு கோபம் ஊட்டும் விதமாக). அதன் பின்னர் நீ அவனை நோக்கி, “நீ இந்த உலகம் அனைத்திற்கும் அதிபதி என்றாயே! எனக்கு உரிய மூன்றாவது அடி நிலத்தைக் கொடு!”, என்றாய். அப்போது மஹாபலி சிறிதும் பயமோ கோபமோ கொள்ளாமல், “பகவானே! நாராயணா! எனது தலைமீது உள்ள மூன்றாவது அடியை வைத்துக் கொள்”, என்றான். இதனைப் பாராட்டியபடி ப்ரஹ்லாதன் அங்கு வந்து உன்னை துதித்தான்.