Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 322)
Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்
தாவத்தைத்யாஸ்த்வநுமதிம்ருதே பர்துராரப்த யுத்தா தேவோபேதைர்பவதனுசரைஸ்ஸங்கதா பங்கமாபந் காலாத்மாSயம் வஸதி புரதோ யத்வசாத் ப்ராக்ஜிதா: ஸ்ம: கிம் வோ யுத்தைரிதி பலிகிரா தேSத பாதாலமாபு: தாவத் தைத்யா: து அநுமதிம் ருதே பர்த்து: ஆரப்த யுத்தா: தேவ: உபேதை பவத் அநுசரை: ஸங்கதா: பங்கம் ஆபந் காலாத்மா அயம் வஸதி புரத: யத் வசாத் ப்ராக் ஜிதா: ஸ்ம: கிம் வ: யுத்தை: இதி பலி கிரா தே அத பாதாலம் ஆபு: तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् । कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिताः स्मः किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पाताळमापुः
குருவாயூரப்பா! அந்த நேரம் அசுரர்கள் தங்கள் அரசனான மஹாபலியின் உத்தரவு இல்லாமல் உன்னைத் தாக்கத் தொடங்கினர். அவர்கள் உனது அடியார்களால் தடுக்கப்பட்டனர். மஹாபலி அசுரர்களிடம், “நாம் யாருடைய தயவால் முன்பு வெற்றியை அடைந்தோமோ, அந்த பகவானே இதோ நம் கண்முன்னே காலத்தை கடந்து நிற்கிறான். நாம் யுத்தம் செய்து என்ன பயன்?”, என்றான். இதனைக் கேட்ட அசுரர்கள் பாதாள லோகத்திற்கு ஓடிவிட்டனர்.