Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 321)

Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்

த்வத் பாதாக்ரம் நிஜபதகதம் புண்டரீகோத்பவோSஸௌ குண்டீ தோயைரஸிசதபுநாத்யஜ்ஜலம் விச்வலோகான் ஹர்ஷோத் கர்ஷாத் ஸுபஹு நந்ருதே கேசரைருத்ஸவே அஸ்மின் பேரீம் நிக்நந் புவனமசரஜ்ஜாம்பவாந் பக்திசாலீ த்வத் பாத அக்ரம் நிஜ பத கதம் புண்டரீகோத்பவ: அஸௌ குண்டீ தோயை: அஸிசத் அபுநாத் யத் ஜலம் விச்வலோகான் ஹர்ஷோத் கர்ஷாத் ஸுபஹு நந்ருதே கேசரை: உத்ஸவே அஸ்மின் பேரீம் நிக்நந் புவனம் அசரத் ஜாம்பவாந் பக்திசாலீ त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् । हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन् भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली

குருவாயூரப்பா! இப்படி நீ வளர்ந்தபோது உனது திருவடியானது (ஓர் அடி எடுத்து வைக்கும் போது) ப்ரும்மலோகமான ஸத்யலோகத்தை அடைகிறது. உடனே நான்முகன் தனது கமண்டலத்தில் உள்ள நீரினால் உனது திருவடியைக் கழுவினார். அந்த நீரானது இந்த பூமியை வளப்படுத்தியது (இதுவே கங்கையாகும்). இதனைக் கண்ட தேவர்கள் நடனம் ஆடினர். உன்னிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்த ஜாம்பவான் தனது வாத்தியத்தை முழங்கியபடி இந்த உலகத்தைச் சுற்றி வந்தான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயம் 21, 22, 23 ஆகியவற்றின் சுருக்கமாக, ச்லோகங்கள் 7 முதல் 10 உள்ளன.