Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 320)
Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்
நிஸ்ஸந்தேஹம் திதிகுலபதௌ த்வய்யசேஷார்ப்பணம் தத் வ்யாதந்வாநே முமுசு: ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம் திவ்யம் ரூபம் தவ ச ததிதம் பச்யதாம் விச்வபாஜாம் உச்சைருச்சைரவ்ருததவதீக்ருத்ய விச்வாண்ட பாண்டம் நிஸ்ஸந்தேஹம் திதிகுலபதௌ த்வயி அசேஷ அர்ப்பணம் தத் வ்யாதந்வாநே முமுசு: ருஷய: ஸாமரா: புஷ்ப வர்ஷம் திவ்யம் ரூபம் தவ ச தத் இதம் பச்யதாம் விச்வபாஜாம் உச்சை: உச்சை: அவ்ருதத் அவதீக்ருத்ய விச்வ அண்ட பாண்டம் निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्व्यातन्वाने मुमुचुरृषयः सामराः पुष्पवर्षम् । दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा - मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! திதியின் குலத்தின் வழிவந்த மஹாபலி சிறிதளவும் சந்தேகமே இல்லாமல் உன்னிடம் நீ கேட்டவற்றை அர்ப்பணம் என்று அளித்தான். அவனது இந்தச் செயலைக் கண்ட தேவர்கள், ரிஷிகள் அவன் மீது மலர்களைத் தூவினர். அப்போது இந்த உலகில் உள்ள அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த சிறிய உருவம் (இது வாமனனைக் குறித்துக் கூறியதாகவும், அல்லது குருவாயூரப்பனைப் பார்த்துக் கூறியதாகவும் கொள்ளலாம்.) அனைத்து அண்டங்களுக்கும் மேலே மேலே வளரத் தொடங்கியது.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயம் 20ன் சுருக்கமாக இந்த ச்லோகமும், முந்தைய ச்லோகமும் உள்ளன.