Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 319)
Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்
யாசத்யேவம் யதி ஸ பகவான் பூர்ணகாமோSஸ்மி ஸோSஹம் தாஸ்யாம்யேவ ஸ்திரமிதி வதந் காவ்ய சப்தோSபி தைத்ய: விந்த்யாவல்யா நிஜதயிதயா தத்தபாத்யாய துப்யம் சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோய பூர்வம் யாசதி ஏவம் யதி ஸ பகவான் பூர்ணகாம: அஸ்மி ஸ: அஹம் தாஸ்யாமி ஏவ ஸ்திரம் இதி வதந் காவ்ய சப்த: அபி தைத்ய: விந்த்யாவல்யா நிஜ தயிதயா தத்த பாத்யாய துப்யம் சித்ரம் சித்ரம் ஸகலம் அபி ஸ ப்ரார்பயத் தோய பூர்வம் याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्यः । विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम्
குருவாயூரப்பா! சுக்ராச்சாரியாரின் சொற்களைக் கேட்ட மஹாபலி அவரிடம், “(நீங்கள் கூறியபடி) அந்தப் பகவானே இங்கு வந்து என்னிடம் யாசிக்கிறான் என்றால் எனது விருப்பம் அனைத்தும் நிறைவேறியவனாகவே நான் உள்ளேன். எனவே நான் தானம் அளிக்கவே போகிறேன்”, என்றான். (உடனே சுக்ராச்சாரியார் அவனை, நீ உனது நாட்டை இழக்கப்போகிறாய் என்று சபித்தார். இதுவும் பகவானின் எண்ணமே ஆகும். இப்படிச் சபித்தால்தான் அவனிடம் இருந்து உலகங்களைக் கைப்பற்ற இயலும்). சுக்ராச்சாரியாரின் சாபத்தை ஏற்ற மகஹாபலி, தனது மனைவியான விந்தியாவளீ என்பவள் தானநீரை அவன் கைகளில் விட, அவனும் நீ கேட்டவற்றை தானமாக அளித்தான் (மஹாபலியின் மனைவியுடைய பதிபக்தியை எண்ணி ஆச்சர்யம் என்கிறார்).