Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 318)

Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்

பாதத்ரய்யா யதி ந முதிதோ விஷ்டபைர்நாபி துஷ்யேத் இத்யுக்தேSஸ்மிந் வரத பவதே தாது காமேSத தோயம் தைத்யாசார்யஸ்தவ கலு பரீக்ஷார்த்தின: ப்ரேணாத்தம் மா மா தேயம் ஹரிரயமிதி வ்யக்தமேவாபபாஷே பாதத்ரய்யா யதி ந முதித: விஷ்டபை ந அபி துஷ்யேத் இதி உக்தே அஸ்மிந் வரத பவதே தாதுகாமே அத தோயம் தைத்ய ஆசார்ய: தவ கலு பரீக்ஷார்த்தின: ப்ரோணாத்தம் மா மா தேயம் ஹரி: அயம் இதி வ்யக்தம் ஏவ ஆபபாஷே पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये - दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् । दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिनः प्रेरणात्तं मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे

குருவாயூரப்பா! நீ மஹாபலியிடம், “அரசனே! மூன்று அடி நிலம் தரவில்லை என்றால், தான் யாசித்ததை பெறாமல் மகிழ்வு அற்றவனான ஒருவன் மூன்று உலகங்கள் கிடைத்தாலும் மகிழ்வு கொள்ள மாட்டான்”, என்றாய். உடனே மஹாபலி நீ விரும்பியபடி நிலத்தை அளிக்க தான நீருடன் தயாராக நின்றான். அப்போது அவன் குருவான சுக்ராச்சாரியார், உனது தூண்டுதல் காரணமாக, “அரசனே! கொடுக்காதே! கொடுக்காதே! இவன் அந்த ஸ்ரீஹரியே ஆவான்”, என்றார் அல்லவா?