Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 317)
Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்
விச்வேசம் மாம் த்ரிபதமிஹ கிம் யாசஸே பாலிசஸ்த்வம் ஸர்வாம் பூமிம் வ்ருணு கிமமுநேத்யாலபத் த்வாம் ஸ த்ருப்யந் யஸ்மாத்தர்பாத் த்ரிபத பரிபூர்த்யக்ஷம: க்ஷேமவாதான் பந்தம் சாஸாவகமதததர்ஹோSபி காடோபசாந்த்யை விச்வேசம் மாம் த்ரிபதம் இஹ கிம் யாசஸே பாலிச: த்வம் ஸர்வாம் பூமிம் வ்ருணு கிம் அமுனா இதி ஆலபத் த்வாம் ஸ த்ருப்யந் யஸ்மாத் தர்பாத் த்ரிபத பரிபூர்த்தி அக்ஷம: க்ஷேமவாதான் பந்தம் ச அஸௌ அகமத் அததர்ஹ: பி காடோபசாந்த்யை विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् । यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षमः क्षेपवादान् बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै
குருவாயூரப்பா! இதனைக் கேட்ட மஹாபலி உன்னிடம், “நான் மூன்று உலகங்களுக்கும் தலைவனாக உள்ளவன் ஆவேன். என்னிடம் வெறும் மூன்று அடிகளையா யாசிப்பது? இத்தனை சிறிய இடத்தினைப் பெற்று என்ன பயன்? நீ கேட்பது பேதைத்தனமாக உள்ளதே?”, என்று மிகுந்த கர்வத்துடன் கூறினான். இந்தக் கர்வத்தினால் மட்டுமே அவனால் அந்த மூன்றடிகளைத் தர இயலாமல் போனது; அதனால் பழிச் சொல்லுக்கு ஆளானான். இத்தகைய அவமானங்களை அவன் அடைய வேண்டியது இல்லாமல் இருந்த போதிலும், அவன் கர்வத்தால் அடைந்தான்.