Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 316)

Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்

தாமக்ஷீணாம் பலிகிரமுபாகர்ண்ய காருண்ய பூர்ணோSபி அஸ்யோத்ஸேகம் சமயிதுமனா தைத்யவம்சம் ப்ரசம்ஸன் பூமிம் பாதத்ரய பரிமிதாம் ப்ரார்த்தயாமாஸித த்வம் ஸர்வம் தேஹீதி து நிகதிதே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் தாம் அக்ஷீணாம் பலி கிரம் உபாகர்ண்ய காருண்ய பூர்ண: அபி அஸ்ய உத்ஸேகம் சமயிதுமனா: தைத்ய வம்சம் ப்ரசம்ஸன் பூமிம் பாதத்ரய பரிமிதாம் ப்ரார்த்தயாம் ஆஸித த்வம் ஸர்வம் தேஹி இதி து நிகதிதே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் तामक्षीणां बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ - प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् । भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात्

குருவாயூரப்பா! எந்தவிதமான செல்வக் குறையுமில்லாத மஹாபலியின் வார்த்தைகளைக் கேட்ட நீ கருணையுடன் அமைதியாக நின்றாய். அவன் கர்வத்தை அடக்குவதற்கு எண்ணி அவனது குலத்தை உயர்வாகப் புகழ்ந்து பேசினாய். பின்னர் அவனிடம், “என் கால்களில் மூன்று அடி அளவு மண் நிலம் வேண்டும்”, என்று நீ கேட்டாய். உனது சிறிய வடிவத்தைக் கண்டும், உனது கால்களின் அளவு கண்டும், உனது இந்த யாசகத்தை நினைத்தும் யார்தான் சிரிக்கமாட்டனர்?