Sriman Narayaneeyam - Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம் (ச்லோகம் 315)
Dasaka 31 - ஸ்ரீ த்ரிவிக்ரம அவதாரம்
ப்ரீத்யா தைத்யஸ்தவ தனுமஹ: ப்ரக்ஷேணாத் ஸர்வதாSபி த்வாமாராத்யந்நஜித ரசயந்நஞ்ஜலிம் ஸஞ்ஜகாத மத்த: கிம் தே ஸமலபிஷிதம் விப்ரஸூனோ வத த்வம் வ்யக்தம் பக்தம் பவனம் அவநீம் வாSபி ஸர்வம் ப்ரதாஸ்யே ப்ரீத்யா தைத்ய: தவ தனும் அஹ: ப்ரக்ஷேணாத் ஸர்வதா அபி த்வாம் ஆராத்யந் அஜித ரசயந் அஞ்ஜலிம் ஸஞ்ஜகாத மத்த: கிம் தே ஸமலபிஷிதம் விப்ரஸூனோ வத த்வம் வ்யக்தம் பக்தம் பவனம் அவநீம் வா அபி ஸர்வம் ப்ரதாஸ்யே प्रीत्या दैत्यस्तव तनुमहःप्रेक्षणीत् सर्वथाऽपि त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद । मत्तः किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं वयक्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये
குருவாயூரப்பா! யாராலும் வெல்லப்பட முடியாதவனே! உனது திருமேனியில் இருந்து வெளிவந்த கம்பீரமான ஒளியைக் கொண்டு உன் மீது மிகுந்த அன்பு கொண்ட மஹாபலி, உன்னை நோக்கி கைகளைக் கூப்பினான். அதன் பிறகு உன்னிடம், “ப்ராமணச் சிறுவனே! உனக்கு வேண்டியது என்ன? உணவா, வீடா, நிலமா அல்லது இவை அனைத்துமா? எது வேண்டும்? கேள், தருகிறேன்”, என்று கூறினான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயம் 18ல் உள்ள இறுதி நான்கு ச்லோகங்கள் இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.