Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 314)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

ப்ரஹ்லாத வம்ச ஜதாய க்ரதுபிர்த்வஜேஷு விச்வாஸதோ நு ததிதம் திதிஜோSபி லேபே யத்தே பதாம்பு கிரீசஸ்ய சிரோபிலால்யம் ஸ த்வம் விபோ குருபுராலய பாலயேதா: ப்ரஹ்லாத வம்ச ஜதாய க்ரதுபி: த்வஜேஷு விச்வாஸத: நு ததிதம் திதிஜ: அபி லேபே யத் தே பத அம்பு கிரீசஸ்ய சிர: அபிலால்யம் ஸ த்வம் விபோ குருபுர ஆலய பாலயேதா: प्रह्लादवंशजतया क्रतुभिर्द्विजेषु विश्वासतो नु तदिदं दितिजोऽपि लेभे । यत्ते पदाम्बु गिरिशस्य शिरोभिलाल्यं स त्वं विभो गुरुपुरालय पालयेथाः

எங்கும் உள்ளவனே! குருவாயூரப்பா! உனது திருவடிகளில் சேர்க்கப்பட்ட நீரானது சிவனின் தலையில் வைத்து கொண்டாடும் அளவிற்கு உயர்ந்தது. (சிவனின் தலையில் உள்ள கங்கையானவள் ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் இருந்து தோன்றினாள்) அத்தனை உயர்வான நீரை திதியின் மகனான அசுரன் தனது தலையில் தெளித்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது என்றால் - அது அவன் ப்ரஹ்லாதனின் குலத்தில் தோன்றியதால் அல்லது யாகம் செய்தால் அல்லது ப்ராமணர்களை மதிப்பதால் ஆகும். இவ்வாறு அவனுக்கு அருள் புரியும் குருவாயூரப்பா! என்னையும் காக்க வேண்டும்.***