Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 313)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

ஆநீதமாசு ப்ருகுபிர்மஹஸாSபிபூதை: த்வாம் ரம்யரூபமஸுர: புலகாவ்ருதாங்க: பக்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிபூஜ்ய பாதௌ தத்தோயமந்வத்ருத மூர்த்தநி தீர்த்த தீர்த்தம் ஆநீதம் ஆசு ப்ருகுபி: மஹஸா அபிபூதை: த்வாம் ரம்யரூபம் அஸுர: புலக ஆவ்ருத அங்க: பக்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிபூஜ்ய பாதௌ தத் தோயம் அந்வத்ருத மூர்த்தநி தீர்த்த தீர்த்தம் आनीतमाशु भृगुभिर्महसाभिभूतै - स्त्वां रम्यरूपमसुरः पुळकावृताङ्गः । भक्त्या समेत्य सुकृती परिणिज्य पादौ तत्तोयमन्वधृत मूर्धति तीर्थतीर्थम्

குருவாயூரப்பா! உன்னுடைய ஒளியைக் கண்டு திகைத்து நின்ற சுக்ராச்சாரியார் போன்றவர்கள் சுதாரித்துக் கொண்டு உன்னை வரவேற்றனர். மிகுந்த அழகிய உருவம் படைத்த உன்னைக் கண்டவுடன் மஹாபலிக்கு மெய் சிலிர்த்தது. அவள் விரைந்து உன்னிடம் வந்து உனது திருவடிகளை நீரில் கழுவினான். எந்தவித சுத்தமான நீரையும் புனிதமாக்கும் அந்த நீரை (உனது திருவடிகளில் சேர்க்கப்பட்ட நீர்) தனது தலைகளில் தெளித்துக் கொண்டான்.