Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 312)
Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்
தாம் நர்மதோத்தரதடே ஹயமேதசாலாம் ஆஸேதுஷி த்வயி ருசா தவ ருத்ததேத்ரை: பாஸ்வாந் கிமேஷ: தஹநோ நு ஸநத்குமாரோ யோகீ நு கோSயமிதி சுக்ரமுகைச்சசங்கே தாம் நர்மதா உத்தரதடே ஹயமேத சாலாம் ஆஸேதுஷி த்வயி ருசா தவ ருத்த தேத்ரை: பாஸ்வாந் கிம் ஏஷ தஹந: நு ஸநத்குமார: யோகீ நு க: அயம் இதி சுக்ரமுகை: சசங்கே तां नर्मदित्तरतटे हयमेधशाला - मासेदुषि त्वयि रुचा तव रुद्धनेत्रैः । भास्वान् किमेष दहनो नु सनत्कुमारो योगी नु कोऽयमिति शुक्रमुखैः शशङ्के
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நர்மதை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருந்த அந்த அச்வமேத யாக சாலையை நீ அடைந்தாய். அப்போது உனது உடலில் இருந்து தோன்றிய ஒளி மிகவும் ப்ரகாசமாக இருந்தது. அந்த ஒளியால் தங்கள் கண்கள் கூசியதால் பார்வை தடுக்கப்பட்டு விளங்கிய சுக்ராச்சாரியார் போன்ற முனிவர்கள் உன்னைக் கண்டு, “இந்தச் சிறுவன் யார்? சூரியனா? அக்னி தேவனா? முனிவரான ஸனத்குமாரரா?”, என்று சந்தேகம் கொண்டனர்.