Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 311)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

காத்ரேண பாவி மஹிமோசித கௌரவம் ப்ராக் வ்யாவ்ருண்வதேவ தரணீம் சலயந்நயாஸீ: சத்ரம் பரோஷ்மதிரணார்த்தமிவாததாநோ தண்டம் ச தாநவ ஜநேஷ்விவ ஸந்நிதாதும் காத்ரேண பாவி மஹிமா உசித கௌரவம் ப்ராக் வ்யாவ்ருண்வதா இவ தரணீம் சலயந் அயாஸீ: சத்ரம் பர உஷ்மதி ரண அர்த்தம் இவ ஆததாந: தண்டம் ச தானவ ஜநேஷு இவ ஸந்நிதாதும் गात्रेण भाविमहिमोचितगौरवं प्राग्व्यावृण्वतेव धरणीं चलयन्नयासीः । छत्रं परोष्मतिरणार्थमिवादधानो दण्डं च दानवजनेष्विवं सन्निधातुम्

குருவாயூரப்பா! பின்னால் (சற்று நேரம் கழித்து) உனக்கு உண்டாகப் போகும் பெருத்த மகிமையை இப்போதே இந்தப் பூமி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உனது உடல் அசைவின் மூலம் பூமியை நடுங்கும்படி நடந்தாய். அரக்கர்களின் பெருமையை மறைப்பது போன்று உனது கைகளில் குடை இருந்தது. அசுரர்களை ஒடுக்குவதற்காக கையில் தண்டம் இருந்தது. இப்படியாக நீ சென்றாய்.