Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 310)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

தாவத் ப்ரஜாபதிமுகைருபநீய மௌஞ்ஜீ தண்டாஜிநாக்ஷ வலயாதிபிரர்ச்யமாந: தேதீப்யமாந வபுரீச க்ருதாக்னி கார்ய: த்வம் ப்ராஸ்திதா பலிக்ருஹம் ப்ரக்ருதாச்வமேதம் தாவத் ப்ரஜாபதிமுகை: உபநீய மௌஞ்ஜீ தண்ட அஜிந அக்ஷ வலயாதிபி: அர்ச்யமாந: தேதீப்யமாந வபு: ஈச க்ருத அக்னி கார்ய: த்வம் ப்ராஸ்திதா பலி க்ருஹம் ப்ரக்ருத அச்வ மேதம் तावत्प्रजापतिमुखैरुपनीय मौञ्जी - दण्डाजिनाक्षवलयादिभिरर्च्यमानः । देदीप्यमानवपुरीश कृताग्निकार्य - स्त्वं प्रास्थिथा बलिगृहं प्रकृताश्वमेधम्

குருவாயூரப்பா! அப்போது உனது தந்தையான காச்யப ப்ரஜாதிபதி உனக்கு உபநயனம் செய்து வைத்தார். நீ, இடுப்பில் கட்டப்படும் மௌஞ்ஜி என்னும் கயிறு, பலாச தண்டம், க்ருஷ்ணாஜினம் என்னும் மான்தோல், ருத்ராக்ஷ மாலை ஆகியவற்றை அப்போது அணிந்தாய். (ஸ்ரீமத்பாகவத்தில் கூறப்பட்டது - கச்யபர் இடுப்பில் உள்ள கயிற்றையும், ப்ரஹஸ்பதி பூணூலையும், பூதேவி மான் தோலையும், சந்திரன் பலாச தண்டத்தையும், தாய் அதிதி கௌபீனத்தையும், நான்முகன் கமண்டலத்தையும், ஸரஸ்வதி ருத்ராக்ஷ மாலையையும், குபேரன் பிட்சை பாத்திரத்தையும், பார்வதி பிட்சை அரிசியையும் அளித்தனர்) அதன் பின்னர் நீ உனது அக்னி ஹோமத்தைச் செய்தாய். தொடர்ந்து, மகாபலி நடத்தும் அச்வமேத யாகம் நடைபெறுகின்ற இடத்தை நோக்கிப் புறப்பட்டாய்.