Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 309)
Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்
புண்யாச்ரமம் தமபிவர்ஷதி புஷ்பவர்ஷை ஹர்ஷாகுலே ஸுரகணே க்ருததூர்ய கோஷே பத்வாSஞ்ஜலிம் ஜய ஜயேதி நுத: பித்ருப்யாம் த்வம் தத் க்ஷணே படுதமம் வடுரூபமாதா: புண்ய ஆச்ரமம் தம் அபிவர்ஷதி புஷ்ப வர்ஷை: ஹர்ஷ ஆகுலே ஸுரகணே க்ருத தூர்ய கோஷே பத்வா அஞ்ஜலிம் ஜய ஜய இதி நுத: பித்ருப்யாம் த்வம் தத் க்ஷணே படுதமம் வடுரூபம் ஆதா: पुण्याश्रमं तमभिवर्षति पुष्पवर्षै - र्हर्षाकुले सुरकुले कृततूर्यघोषे । बध्वाञ्जलिं जय जयेति तनुः पितृभ्यां त्वं तत्क्षणे पटुतमं वटुरूपमाधाः
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (நீ பிறந்ததால்) மிகுந்த புண்ணியம் அடைந்த காச்யபரின் ஆச்ரமத்தை அனைத்து திசைகளில் இருந்தும் மலர்கள் தூவி ஸ்தோத்ரம் செய்தனர். (யார்?) உனது பிறப்பால் மிகுந்த மகிழ்வுற்ற தேவர்கள் இப்படிச் செய்தனர். உனது தாய் தந்தை உன்னை வாழ்த்தினர். அந்த நொடியிலேயே நீ ப்ரஹ்மச்சாரியாக உனது உருவத்தை மாற்றிக் கொண்டாய்.