Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 308)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

த்வம் காச்யபே தபஸி ஸந்நித தத்ததாநீம் ப்ராப்தோSஸி கர்ப்பமதிதே: ப்ரணுதோ விதாத்ரா ப்ராஸூத ச ப்ரகட வைஷ்ணவ திவ்ய ரூபம் ஸா த்வாதசீ ச்ரவண புண்யதிநே பவந்தம் த்வம் காச்யபே தபஸி ஸந்நிததத் ததாநீம் ப்ராப்த: அஸி கர்ப்பம் அதிதே: ப்ரணுத: விதாத்ரா ப்ராஸூத ச ப்ரகட வைஷ்ணவ திவ்ய ரூபம் ஸா த்வாதசீ ச்ரவண புண்யதிநே பவந்தம் त्वं काश्यपे तपसि सन्निदधत्तदानीं प्राप्तोऽसि गर्भमदितेः प्रणुतो विधात्रा । प्रासूत च प्रकटवैष्णवदिव्यरूपं सा द्वादशीश्रवणपुण्यदिने भवन्तम्

குருவாயூரப்பா! அதன் பின்னர் காச்யப முனிவரின் தவ வலிமையால் உண்டான வீர்யத்தில் நீ புகுந்தாய். அதன் மூலம் அதிதியின் கர்ப்பத்தில் புகுந்தாய். அப்போது நான்முகன் உன்னைத் துதித்தான். அதிதியானவள் ஒளி வீசும்படியான சங்கு சக்ரம் கொண்ட திருமேனி உடைய உன்னை, துவாதசி திதியன்று, ச்ரவண நட்சத்திரத் தினத்தில் பெற்றாள்.