Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 307)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

தஸ்யாவதௌ த்வயி நிலீநமதேரமுஷ்யா: ச்யாமச்சதுர்புஜ வபு: ஸ்வயமாவிராஸீ: நம்ராம் ச தாமிஹ பவத்தநயோ பவேயம் கோப்யம் மதீக்ஷணமிதி ப்ரலபந்நயாஸீ: தஸ்ய அவதௌ த்வயி நிலீந மதே: அமுஷ்யா: ச்யாம: சதுர்புஜ வபு: ஸ்வயம் ஆவிராஸீ: நம்ராம் ச தாம் இஹ பவத்தநய: பவேயம் கோப்யம் மத் ஈக்ஷணம் இதி ப்ரலபன் அயாஸீ: तस्यावधौ त्वयि निलीनमतेरमुष्याः श्यामश्चतुर्भुजवपुस्स्वयमाविरासीः । नम्रां च तामिह भवत्तनयो भवेयं गोप्यं मदीक्षणमिति प्रलपन्नयासीः

குருவாயூரப்பா! அத்தகைய விரதத்தின் இறுதியில் அதிதி உன் மீது தனது மனதை முழுவதுமாக செலுத்தியிருந்தாள். அப்போது நீ அவளுக்கு முன்பாக கறுத்த உனது திருமேனியுடன், நான்கு திருச்சக்கரங்களுடன் கூடிய உருவமாகத் தேன்றினாய். அவள் உன்னைக் கண்டதும் துதித்து நின்றாள். நீ அவளிடம், “நான் உனக்கு மகனாகப் பிறக்கப் போகிறேன். இவ்விதமாக என்னை நீ இங்கு பார்த்த காட்சியை இரகசியமாக வைத்துக் கொள்”, என்று கூறி மறைந்தாய்.