Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 306)
Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்
புத்ரார்த்தி தர்சந வசாத் அதிதிர்விஷண்ணா தம் காச்யபம் நிஜபதிம் சரணம் ப்ரபந்நா த்வத் பூஜநம் ததுதிதம் ஹி பயோ வ்ரதாக்யம் ஸா த்வாதசாஹமசரத் த்வயி பக்தி பூர்ணா புத்ர ஆர்த்தி தர்சந வசாத் அதிதி: விஷண்ணா தம் காச்யபம் நிஜ பதிம் சரணம் ப்ரபந்நா த்வத் பூஜநம் தத் உதிதம் ஹி பயோ வ்ரத ஆக்யம் ஸா த்வாதசாஹம் அசரத் த்வயி பக்தி பூர்ணா पुत्रार्तिदर्शनवशाददितिर्विषण्णा तं काश्यपं निजपतिं शरणं प्रपन्ना । त्वत्पूजनं तदुदितं हि पयोव्रताख्यं सा द्वादशाहमचरत्त्वयि भक्तिपूर्णा
குருவாயூரப்பா! தனது புத்திரர்களான தேவர்கள் நிலையைக் கண்ட அவர்கள் தாயான அதிதி வருத்தம் கொண்டாள். (காச்யப முனிவருக்கும் திதிக்கும் பிறந்தவர்கள் அசுரர்கள்; அவருக்கும் அதிதிக்கும் பிறந்தவர்கள் தேவர்கள் ஆவர்). தனது கணவரான காச்யப முனிவரின் பாதங்களில் விழுந்து சரணம் அடைந்தாள். அவரும் பயோவ்ரதம் என்னும் பெயர் கொண்ட உன்னுடைய பூஜையை அவருக்கு உபதேசித்தார். அவளும் அந்தப் பூஜையை மிகுந்த பக்தியுடன் பன்னிரண்டு நாட்கள் செய்தாள்.