Sriman Narayaneeyam - Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம் (ச்லோகம் 305)

Dasaka 30 - ஸ்ரீவாமன அவதாரம்

சக்ரேண ஸம்யதி ஹதோSபி பலிர்மஹாத்மா சுக்ரேண ஜீவிததநு: க்ரது வர்த்திதோஷ்மா விக்ராந்திமாந் பயநிலீந ஸுராம் த்ரிலோகீம் சக்ரே வசே ஸ தவ சக்ரமுகாநபீத: சக்ரேண ஸம்யதி ஹத: அபி பலி: மஹாத்மா சுக்ரேண ஜீவிததநு: க்ரது வர்த்திதோஷ்மா விக்ராந்திமாந் பய நிலீந ஸுராம் த்ரிலோகீம் சக்ரே வசே ஸ தவ சக்ர முகாந் அபீத: शक्रेण संयति हतोऽपि बलिर्महात्मा शुक्रेण जीविततनुः क्रतुवर्धितोष्मा । विक्रान्तिमान् भयनिलीनसुरां त्रिलोकीं चक्रे वशे स तव चक्रमुखादभीतः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பரந்த மனம் உடைய பலி என்ற அசுரன் இந்திரனால் கொல்லப்பட்ட போதும் (தசகம் 29 - ஸ்லோகம் 7) சுக்ராச்சாரியாரால் உயிர் பிழைத்தான். பின்னர் சுக்ராச்சாரியரால் செய்யப்பட்ட விஸ்வஜித் என்ற யாகம் மூலமாக மிகுந்த சக்தியையும் வலிமையையும் பெற்றான். அதனால் உன்னுடைய சக்கர ஆயுதத்திற்குக் கூடப் பயப்படாமல் அனைத்து உலகங்களையும் தன் வசமாக்கினான். தேவர்களை ஓடி ஒளிய வைத்தான்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் அத்யாயங்கள் 16 முதல் 18 முடிய உள்ள ச்லோகங்கள் இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.