Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 303)
Dasaka 29 - மோஹினி அவதாரம்
ஆராமஸீமநி ச கந்துக காதலீலா லோலாயமாந நயநாம் கமநீம் மநோஜ்ஞாம் த்வாமேஷ வீக்ஷ்ய விகலத் வஸநாம் மநோபூ வேகாதநங்கரிபுரங்க ஸமாலி லிங்க ஆராம ஸீமநி ச கந்துக காத லீலா லோலாயமாந நயநாம் கமநீம் மநோஜ்ஞாம் த்வாம் ஏஷ வீக்ஷ்ய விகலத் வஸநாம் மநோபூ வேகாத் அநங்கரிபு: அங்க ஸமாலி லிங்க आरामसीमनि च कन्दुकघातलीला - लोलायमाननयनां कमनीं मनोज्ञाम् । त्वामेष वीक्ष्य विगळद्वसनां मनोभू - वेगादनङ्गरिपुरङ्ग समालिलिङ्ग
குருவாயூரப்பா! ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள தோட்டத்தில் ஒரு மூலையில் நீ பெண் உருவம் எடுத்து பந்து விளையாடினாய். அந்த விளையாட்டினால் களைப்புற்ற கண்கள் அலை மோத, அழகிய பெண்ணாக இருந்த உனது மேலாடை காற்றினால் நழுவி விழுந்தது. இதனை பார்த்த, மன்மதனையே எரித்த சிவன், உன் மீது விருப்பம் கொண்டு உன்னைத் தழுவினார் அல்லவா?