Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 302)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

யோஷா வபுர்தநுஜ மோஹனம் ஆஹிதம் தே ச்ருத்வா விலோகன குதூஹலவான் மஹேச: பூதைஸ்ஸமம் கிரிஜயா ச கத: பதம் தே ஸ்துத்வாSப்ரவீதபிமதம் த்வமதோ திரோதா: யோஷா வபு: தநுஜ மோஹனம் ஆஹிதம் தே ச்ருத்வா விலோகன குதூஹலவான் மஹேச: பூதை: ஸமம் கிரிஜயா ச கத: பதம் தே ஸ்துத்வா அப்ரவீத் அபிமதம் த்வம் அத திரோதா: योषावपुर्दनुजमोहनमाहितं ते श्रुत्वं विलोकनकुतूहलवान् महेशः । भूतैस्समं गिरिजया च गतः पदं ते स्तुत्वाऽब्रवीदभिमतं त्वमथो तिरोधाः

குருவாயூரப்பா! அஸுரர்களை மயக்குவதற்காக நீ பெண் வேடம் தரித்தாய் என்று கேள்விப்பட்ட சிவன் அந்த வடிவத்தில் உன்னைக் காண ஆவல் கொண்டார். தனது பூதகணங்கள் மற்றும் பார்வதியோடு உன்னுடைய இருப்பிடமான ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தார். உன்னை ஸ்தோத்திரம் செய்து தனது விருப்பத்தைக் கூறினார். உடனே நீ மறைந்து விட்டாய்.