Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 301)
Dasaka 29 - மோஹினி அவதாரம்
த்வம் காலநேமிமத மாலிமுகாஞ்ஜகந்த சக்ரோ ஜகாந பலிஜம்பவலாந் ஸபாகாந் சுஷ்கார்த்ர துஷ்கரவதே நமுசௌ ச லூநே பேதேந நாரதகிரா ந்யருணோ ரணம் த்வம் த்வம் காலநேமிம் அத மாலிமுகாந் ஜகந்த சக்ரோ ஜகாந பலி ஜம்ப வலாந் ஸபாகாந் சுஷ்க ஆர்த்ர துஷ்கர வதே நமுசௌ ச லூநே பேதேந நாரத கிரா ந்யருண: ரணம் த்வம் त्वं कालनेमिमथ मालिसुखाञ्जघन्थ शक्रो जघान बलिजम्भवलान् सपाकान् । शुष्कार्द्रदुष्करवधे नमुचौ च लूने फेनेन नारदगिरा न्यरुणो रणं त्वम्
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பிறகு நீ மாலி, காலநேமி என்ற அஸுரர்களைக் கொன்றாய். பாகாஸுரன், பலி, ஜம்பன், வலன் போன்றவர்களை இந்த்ரன் கொன்றான். உலர்ந்துள்ள பொருள் அல்லது நனைந்துள்ள பொருள் ஆகியவற்றால் மரணம் கிடையாது என்று வரம் பெற்ற நமுசியை, கடல் நுரை மூலம் கொன்றனர். அப்போது நீ நாரதனின் சொற்கள் மூலமாகப் போரை நிறுத்தினாய்.