Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 300)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

த்வத்த: ஸுதாஹரண யோக்யபலம் பரேஷு தத்வா கதே த்வயி ஸுரை: கலு தே வ்யக்ருஹ்ணந் கோரேSத மூர்ச்சதி ரணே பலிதைத்ய மாயா வ்யாமோஹிதே ஸுகரேண த்வமிஹாவிராஸீ: த்வத்த: ஸுதா ஹரண யோக்ய பலம் பரேஷு தத்வா கதே த்வயி ஸுரை: கலு தே வ்யக்ருஹ்ணந் கோர அத மூர்ச்சதி ரணே பலி தைத்ய மாயா வ்யாமோஹிதே ஸுகரேண த்வம் இஹ ஆவிராஸீ: त्वत्तः सुधाहरणयोग्यफलं परेषु दत्त्वा गते त्वयि सुरैः खलु ते व्यगृह्णन् । घोरेऽथ मूर्छति रणे बलिदैत्यमाया - व्यामोहिते सुरगणे त्वमिहाविरासीः

குருவாயூரப்பா! உன்னிடம் இருந்து பலவந்தமாக அமிர்த கலசத்தைப் பிடுங்கிய அஸுரர்களுக்கு அவர்களுக்கான பலனை அளித்த பின்னர் (அந்தப் பலன் = அவர்களுக்கு அமிர்தம் கிட்டவில்லை) நீ மறைந்து விட்டாய். இதனால் கோபம் கொண்ட அஸுரர்கள், தேவர்களுடன் சண்டையிடத் தொடங்கினர். அப்போது பலி என்னும் ஓர் அஸுரனின் மிகுந்த மாயத்தன்மை வாய்ந்த யுத்தத்தால் தேவர்கள் மயங்கி விழுந்தனர். அப்போது நீ மீண்டும் வந்தாய்.