Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 299)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

அஸ்மாஸ்வியம் ப்ரணயிநீத்யஸுரேஷு தேஷு ஜோஷம் ஸ்திதேஷ்வத ஸமாப்ய ஸுதாம் ஸுரேஷு த்வம் பக்தலோகவசகோ நிஜரூபமேத்ய ஸ்வர்பாநுமர்த்த பரிபீத ஸுதம் வ்யலாவீ: அஸ்மாஸு இயம் ப்ரணயிநீ இதி அஸுரேஷு தேஷு ஜோஷம் ஸ்திதேஷு அத ஸமாப்ய ஸுதாம் ஸுரேஷு த்வம் பக்தலோக வசக: நிஜ ரூபம் ஏத்ய ஸ்வர்பாநும் அர்த்த பரிபீத ஸுதம் வ்யலாவீ: अस्मास्वियं प्रणयिनीत्युसुरेषु तेषु जोषं स्थितेष्वथ समाप्य सुधां सुरेषु । त्वं भक्तलोकवशगो निजरूपमेत्य स्वर्भानुमर्धपरिपीतसुधं व्यलावीः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது அசுரர்கள் உன்னைப் பற்றி என்ன நினைத்தனர்? இந்தப் பெண் நம்மிடம் மிகவும் அன்புடன் இருக்கிறாள் என்றே நினைத்தனர். அதனால் எதுவும் பேசாது அமர்ந்திருந்தனர். பக்தர்களைக் காப்பதில் குறியாக உள்ள நீ, உனது திருக்கரத்தில் இருந்த அமிர்தம் முழுவதையும் தேவர்கள் வரிசையிலேயே முடித்து விட்டாய். (ஆனால் ராகு என்பவன் மட்டும் தேவர்கள் போல் வேடம் இட்டுக் கொண்டு அவர்கள் வரிசையில் அமர்ந்து அமிர்தம் அருந்தினான்) அமிர்தம் உண்ட ராகுவின் தலையை உனது உண்மையான உருவத்தை மீண்டும் எடுத்துக்கொண்டு, வெட்டினாய் அல்லவா?