Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 297)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

கா த்வம் ம்ருகாஷி விபஜஸ்வ ஸுதாமிமாமி த்யாருட ராகவிவசாநபியாசதோSமூந் விச்வஸ்யதே மயி கதம் குலடாSஸ்மி தைத்யா இத்யாலபந்நபி ஸுவிச்வஸிதாநதாநீ: கா த்வம் ம்ருகாஷி விபஜஸ்வ ஸுதாம் இமாம் இதி ஆரூட ராக விவசாந் அபியாசத: அமூந் விச்வஸ்யதே மயி கதம் குலடா அஸ்மி தைத்யா இதி ஆலபந் அபி ஸுவிச்வஸிதாந் அதாநீ: का त्वं मृगाक्षि विभजस्व सुधामिमामि - त्यारूढरागविवशानभियाचतोऽमून् । विश्वस्यते मयि कथं कुलटाऽस्मि दैत्या इत्यालपन्नपि सुविश्वसितानतानीः

குருவாயூரப்பா! உன்னிடம் அஸுரர்கள், “மானின் விழி போன்ற கண்களை உடையவளே! நீ யார்? இந்த அமிர்தத்தை நீ எங்களுக்குப் பங்கிட்டுத் தர வேண்டும்”, என்றனர். உடனே நீ அவர்களிடம், “நான் ஒரு நல்ல நடத்தை இல்லாதவள். என்னை எப்படி நீங்கள் நம்புகிறீர்கள்?”, என்று கேட்டாய். இதன் மூலம் அவர்களுக்கு உன் மீது உள்ள நம்பிக்கையை வளர்த்தாய்.