Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 296)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

ச்யாமாம் ருசாSபி வயஸாSபி தநும் ததாநீம் ப்ராப்தோSஸி துங்க குசமண்டல பங்குராம் த்வம் பீயூஷ கும்பகலஹம் பரிமுச்ய ஸர்வே த்ருஷ்ணாகுலா: ப்ரதியயுஸ்த்வதுரோஜ கும்பே ச்யாமாம் ருசா அபி வயஸா அபி தநும் ததாநீம் ப்ராப்த: அஸி துங்க குச மண்டல பங்குராம் த்வம் பீயூஷ கும்ப கலஹம் பரிமுச்ய ஸர்வே த்ருஷ்ணா ஆகுலா: ப்ரதியயு: த்வத் உரோஜ கும்பே श्यामां रुचापि वयसापि तनुं तदानीं प्राप्तोऽसि तुङ्गकुचमण्डलंभङ्गुरां त्वम् । पीयूषकुम्भकलहं परिमुच्य सर्वे तृष्णाकुलाः प्रतिययुस्त्वदुरोजकुम्भे

குருவாயூரப்பா! அதன் பின்னர் நீ ஒளியுடைய உருவத்துடனும், இளமையாக உள்ளதும், நீல நிறமாக உள்ளதும், பருத்த ஸ்தனங்களின் பாரத்தால் சற்றே முன்னோக்கி உள்ளதும் ஆகிய பெண் உருவத்துடன் வந்தாய் அல்லவா? உன்னை இப்படிக் கண்ட அஸுரர்கள் அமிர்த கலசத்தை விட்டுவிட்டு உன்னுடைய கும்பம் போன்ற ஸ்தனங்களில் ஆசை கொண்டு உன்னிடம் வந்தனர் அல்லவா?