Sriman Narayaneeyam - Dasaka 29 - மோஹினி அவதாரம் (ச்லோகம் 295)

Dasaka 29 - மோஹினி அவதாரம்

உத்கச்சதஸ்தவ கராதம்ருதம் ஹரத்ஸு தைத்யேஷு தாநசரணாநநுநீய தேவாந் ஸத்யஸ்திரோததித தேவ பவத் ப்ரபாவாத் உத்யத்ஸ்வ யூத்ய கலஹா திதிஜா பபூவு: உத்கச்சத: தவ கராத் அம்ருதம் ஹரத்ஸு தைத்யேஷு தாந் அசரணாந் அநுநீய தேவாந் ஸத்ய: திரோததித தேவ பவத் ப்ரபாவாத் உத்யத் ஸ்வ யூத்ய கலஹா திதிஜா பபூவு: उद्गच्छतस्तव करादमृतं हरत्सु दैत्येषु तानशरणाननुनीय देवान् । सधस्तिरोदधिथ देव भवत्प्रभावा - दुद्यत्सयूथ्यकलहा दितिजा बभूवुः

குருவாயூரப்பா! திருப்பாற்கடலில் இருந்து தன்வந்த்ரியாக வெளியில் தோன்றிய உன் திருக்கரங்களில் இருந்த அமிர்தத்தை அஸுரர்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். அப்போது தேவர்கள் புகலிடம் இல்லாமல் இருந்தனர். அவர்களை நீ சமாதானப்படுத்திவிட்டு உடனே மறைந்தாய். உனது மாயையால் தேவர்களும் அஸுரர்களும் சண்டையிடத் தொடங்கினர்.விளக்கம் – ஸ்ரீமத்பாகவதம் viii-8-35 முதல் viii-12 முடிய உள்ள ச்லோகங்கள் இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.