Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 293)
Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்
அதிமோஹந விப்ரமா ததாநீம் மதயந்தீ கலு வாருணீ நிராகாத் தமஸ: பதவீமதாஸ்த்வமேநா மதிஸம்மாநநயா மஹாஸுரேப்ய: அதிமோஹந விப்ரமா ததாநீம் மதயந்தீ கலு வாருணீ நிராகாத் தமஸ: பதவீம் அதா: த்வம் ஏநாம் அதி ஸம்மாநநயா மஹா அஸுரேப்ய: अतिमोहनविभ्रमा तदानीं मदयन्ती खलु वारुणी निरागात् । तमसः पदवीमदास्त्वमेना – मतिसम्माननया महासुरेभ्यः
குருவாயூரப்பா! அதன் பின்னர் திருப்பாற்கடலிலிருந்து, பார்ப்பவர்கள் மனம் கவரும்படி செயல்களைச் செய்பவளும், போதையை உண்டாக்குபவளும் ஆகிய வாருணீதேவி (இவள் கண்களுக்கு அதிபதி ஆவாள்) தோன்றினாள். தாமஸ குணமான அறிவின்மைக்கு இருப்பிடமான இவளை நீ அஸுரர்களுக்கு அளித்தாய்.