Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 292)
Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்
உரஸா தரஸா மமாநிதைநாம் புவநாநாம் ஜநநீமநந்ய பாவாம் த்வதுரோ விலஸத்ததீக்ஷண ஸ்ரீ பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டமாஸ விச்வம் உரஸா தரஸா மமாநித ஏநாம் புவநாநாம் ஜநநீம் அநந்ய பாவாம் த்வத் உரோ விலஸத் த்வத் ஈக்ஷண ஸ்ரீ பரிவ்ருஷ்ட்யா பரிபுஷ்டம் ஆஸ விச்வம் उरसा तरसा ममानिथैनां भुवनानां जननीमनन्यभावाम् । त्वदुरोविलसत्तदीक्षणश्री परिवृष्ट्या परिपुष्टमास विश्वम्
குருவாயூரப்பா! அனைத்து உலகங்களுக்கும் தாய் போன்று விளங்குபவளும், உன்னைத் தவிர வேறு யார் மீதும் பற்று இல்லாதவளும் ஆகிய அந்த மஹாலக்ஷ்மியை உனது திருமார்பில் நீ எடுத்து வைத்துக் கொண்டு அவளைப் பெருமைப்படுத்தினாய். உன்னுடைய திருமார்பில் அமர்ந்துள்ள அந்த ஸ்ரீதேவியால் இந்த உலகம் அவளது கடாக்ஷம் என்ற மழையில் நனைகிறது.