Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 291)

Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்

கிரிச த்ருஹிணாதி ஸர்வ தேவாந் குணபாஜோSப்யவிமுக்த தோஷலேசாந் அவம்ருச்ய ஸதைவ ஸர்வரம்யே நிஹிதா த்வய்யநயாSபி திவ்யமாலா கிரிச த்ருஹிண ஆதி ஸர்வ தேவாந் குண பாஜ: அபி அபிமுக்த தோஷ லேசாந் அவம்ருச்ய ஸதா ஏவ ஸர்வ ரம்யே நிஹிதா த்வயி அநயா அபி திவ்ய மாலா गिरिश द्रुहिणादिसर्वदेवान् गुणभाजोऽप्यविमुक्तदोषलेशान् । अवमृश्य सदैव सर्वरम्ये निहिता त्वय्यनयाऽपि दिव्यमाला

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உத்தமமான குணங்கள் கொண்ட நான்முகன், சிவன் முதலானோர் முற்றிலுமாக தோஷம் இல்லாதவர்கள் அல்லர் என்று உணர்ந்தாள். அனைவரும் விரும்பும் அனைத்துத் திருக்கல்யாண குணங்களும் பொருந்திய உன்னிடத்தில் அந்த மஹாலக்ஷ்மியால், அந்த உயர்ந்த மாலை அணிவிக்கப்பட்டது அல்லவா?