Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 290)

Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்

வரணஸ்ரஜமாத்த ப்ருங்கநாதாம் தததீ ஸா குசகும்ப மந்தயாநா பதசிஞ்ஜித மஞ்ஜு நூபுரா த்வாம் கலித வ்ரீல விலாஸமாஸஸாத வரண ஸ்ரஜம் ஆத்த ப்ருங்க நாதாம் தததீ ஸா குச கும்ப மந்த யாநா பத சிஞ்ஜித மஞ்ஜு நூபுரா த்வாம் கலித வ்ரீல விலாஸம் ஆஸஸாத वरणस्रजमात्तभृङ्गनादां दधती सा कुचकुम्भमन्दयाना । पदशिञ्जितमञ्जुनूपुरा त्वां कलितव्रीळविलासमाससाद

குருவாயூரப்பா! அப்படிப்பட்ட மஹாலக்ஷ்மி தனது கைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்யும்படியான, ஸ்வயம்வர மாலையைக் கொண்டு வந்தாள். தனது கும்பம் போன்ற ஸ்தனங்களின் பாரத்தால் மெதுவாக நடந்து, தன் திருவடிகளில் உள்ள சதங்கை சப்தமிடும்படி நடந்து, மிகுந்த நாணத்துடன் நீ உள்ள இடத்திற்கு வந்தாள்.