Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 289)

Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்

அபிஷேக ஜலாநுபாதி முக்த த்வதபாங்கை: அவபூஷிதாங்க வல்லீம் மணிகுண்டல பீதசேல ஹார ப்ரமுகைஸ்தாமமராதயோSந்வபூஷந் அபிஷேக ஜல அநுபாதி முக்த த்வத் அபாங்கை: அவபூஷித அங்க வல்லீம் மணி குண்டல பீத சேல ஹார ப்ரமுகை: தாம் அமர ஆதய: அந்வபூஷந் अभिषेकजलानुपातिमुग्ध – त्वदपाङ्गैरवभूषिताङ्गवल्लीम् । मणिकुण्डलपीतचेलहार – प्रमुखैस्ताममरादयोऽन्दभूषन्

குருவாயூரப்பா! திருமஞ்சனம் செய்யப்பட்ட நீர் மட்டும் அல்லாது உன்னுடைய கடைக்கண் பார்வையும் அவள் மீது விழுந்தது. மிகவும் அழகான கொடி போன்ற மெல்லிய திருமேனியைக் கொண்ட மஹாலக்ஷ்மியை, தேவர்கள் இரத்தினங்கள் பதித்த குண்டலங்கள், மாலைகள், மஞ்சள் ஆடை போன்றவற்றால் அலங்காரம் செய்தனர்.