Sriman Narayaneeyam - Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம் (ச்லோகம் 288)
Dasaka 28 - ஸ்ரீமஹாலக்ஷ்மி அவதாரம்
த்வயி தத்தஹ்ருதே ததைவ தேவ்யை த்ரிதசேந்த்ரோ மணிபீடிகாம் வ்யதாரீத் ஸகலோபஹ்ருதாபிஷேசநீயை: ருஷயஸ்தாம் ச்ருதிகீர்ப்பிரப்யஷிஞ்சந் த்வயி தத்தஹ்ருதே ததா ஏவ தேவ்யை த்ரிதசேந்த்ர: மணிபீடிகாம் வ்யதாரீத் ஸகல உபஹ்ருத அபிஷேசநீயை: ருஷய: தாம் ச்ருதி கீர்ப்பி: அப்யஷிஞ்சந் त्वयि दत्तहृद्दे तदैव देव्यै त्रिदशेन्द्रो मणिपीठिकां व्यतारीत् । सकलोपहृताभिषेचनीयै – रृषयस्तां श्रुतिगीर्भिरभ्यषिञ्चन्
குருவாயூரப்பா! உன்னிடத்தில் தனது மனதை பறி கொடுத்தவளான மஹாலக்ஷ்மிக்கு, அவள் தோன்றியவுடனேயே, இந்திரன் இரத்னங்களால் செய்யப்பட்ட பீடம் ஒன்றை அளித்தான். பல புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட நீரினால் முனிவர்கள் வேதம் ஓதியபடி அவளை நீராட்டினர்.